திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது. இதனால், விடுமுறை தினமான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர். கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.