உடுமலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

0பார்த்தது
உடுமலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பகல் 1 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனியில் இருந்து கோவை, பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் பாலப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து 4 வழி சாலை வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, பழனி வழியாக வரும் வாகனங்கள் ராகல் பாவி பிரிவில் பிரிந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் பழனி சாலை அடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி