உடுமலை மூணார் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

880பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மூணாறு, மறையூர், காந்தளூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். சாலை குறுகலாக இருப்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிக்கல் ஏற்பட்டு, நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் அவதிப்பட்டனர். பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி