திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மேலும், இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் ஆபத்தான சூழலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும், அதை அரசுகள் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத் தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.