திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூளவாடி அருகே வட மாநில தொழிலாளர்கள் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குடிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்; கீதா, தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் காவலர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் காமதேவநாயக் (29) த/பெ. கஞ்சன்நாயக், ரய்பள்ளி, ஜி உதயகிரி, ஒடிசா, பத்மநாபஜெனா (38) த/பெ. கரகோலா, கேந்துஜர், ஒடிசா, என தெரிய வந்ததுடன், அவர்கள் ஒடிசாவிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பதற்காக வைத்திருந்ததால் இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த சுமார் 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, அவர்கள் மீது குடிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து மேற்படி இரண்டு நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.