திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், கால்நடை மருத்துவர்களைக் கொண்டு நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தவும், கால்நடை மருத்துவப் பராமரிப்புக்கும் ₹6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.