திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 3-வது வார்டு யூகேசி நகர் பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டது பல்வேறு பிரிவுகளுடன் கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
ஆனால் நகராட்சியின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் மேலும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது. எனவே வருங்காலத்தில் போக்குவரத்து வசதி மிகுந்த எளிதில் சென்றடையும் நிலையில் அமைப்பதற்கு முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.