திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி குடிமங்கலம் பெதப்பம்பட்டி உள்வட்ட வருவாய் கிராம மக்கள் ஆதார் சார்ந்த பல்வேறு சேவைகளுக்கு உடுமலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது. பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், பெதப்பம்பட்டியில் ஆதார் பதிவு மையம் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்காட் சார்பில் பெதப்பம்பட்டியில் உள்ள குடிமங்கலம் வட்டார அலுவலகத்தில் ஆதார் பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.