உடுமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு. ஜெயக்குமார், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குடிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தனது சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் கே. ஈஸ்வர சாமி, ஒன்றியச் செயலாளர் எம். எஸ். முரளி மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.