உடுமலை: 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை!

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவில் நிர்வாகம் மூன்றாவது நாளாக குளிக்க தடை விதித்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி