திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இளைய முத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் பிரியாணிக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.