திருப்பூர் உடுமலையைச் சேர்ந்த பாஜக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், திமுக ஈஸ்வர சாமி எம்பி உடன் நட்பு ரீதியான சந்திப்பு நடைபெற்ற போது திமுகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது உண்மையல்ல என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாலசுந்தரம் தற்போது வரை பாஜகவில் உறுப்பினராக உள்ளார்.