திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராகல் பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், முதல் பருவத் தேர்வில் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் பாராட்டினர்.