திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரபட்டி ஊராட்சி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் முதல்வர் விழாவில் 108 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய வரை பலருக்கு வீட்டுமனை ஒதுக்கப்படாததால், இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.