திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சியில் மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பத்மநாபன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.