உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.