திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில் 133 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் கணக்கம்பாளையம் ஜீவா நகரில் அமைக்கப்பட்டிருந்தது. இவை தற்போழுது சர்தார் வீதியில் உள்ள வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கணக்கம்பாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் மதுக்குடிக்கும் இடமாக மாறிவருகிறது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.