உடுமலை: உப்பாறு ஓடை தடுப்பணை நிரம்பியதால் மகிழ்ச்சி

2பார்த்தது
உடுமலை: உப்பாறு ஓடை தடுப்பணை நிரம்பியதால் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் பெதப்பம்பட்டி வழியாக தாராபுரத்தில் உள்ள உப்பாறு அணைக்கு ஓடைகள் மூலம் மழை நீர் சென்று வருகிறது. கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட உப்பாறு ஓடையில் தொடர் மழையின் காரணமாக தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இந்த நிலை விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி