திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நிலையில் சின்னாறு சோதனை சுவடியில் இருந்து கோவில் வரையிலும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதற்காக குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு கோடந்தூர் சுற்றுச்சூழல் கணக்கில் சேர்க்கப்படுகின்றது. இவை மலைவேல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மலை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் நிலையில் சில மாதங்களாக மலைவாழ் மக்களுக்கு தெரியாமல் இல்லாமல் சுற்றுச்சூழல் குழுவில் பணத்தை வனத்துறை எடுத்துக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே கட்டளை மாரியம்மன் கோவில் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் சுற்றுச்சூழல் நிதி முறையாக மறைவால் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.