உடுமலை: கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், அடி வெள்ளி, சின்ன பொம்மன் சாலை, சுண்டக்காம்பாளையம், வாழவாடி, அரசூர், மூங்கில் தொழுவு, ஆத்துக்கிணத்தம்பட்டி போன்ற பகுதிகளுக்கு போதிய அளவு கிராமப்புற பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அப்பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி