திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரி எதிரில் செயல்பட்டு வரும் ஆசிரியர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான பயிற்சி யாளர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்தப் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், இலவச சைக்கிள், பாடப் புத்தகம், சீருடை மற்றும் வரைபடக் கருவிகள் அரசால் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.