திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 24 ஆம் தேதி நோன்பு சாப்பிடுதல் உடன் தொடங்கியது. 31 ஆம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று சிம்ம வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.