திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுண்டக்கம்பாளையம் கிராமத்தில் கரும்பு பயிர்களை தாக்கியுள்ள புதிய வகை நோய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உடுமலை வட்டார வேளாண்மை துறையினர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். நோயின் தீவிரத்தை கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தேவையான பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.