திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எதிரே சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.