திருப்பூர் உடுமலையில் 350 ஏக்கர் கோவில் நிலத்தை தனிநபர் ஒருவர் முறைகேடாக பட்டா ஏற்பாடு செய்து அபகரித்ததாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பான அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 70 ஆண்டுகளாக 38க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்த இந்த நிலத்தை வர்ஷினி இளங்கோவன் என்ற தனிநபர் விலைக்கு வாங்கியதாக கூறி பட்டா பெற்றுள்ளார். இந்த செயலை கண்டித்து தொழிற்சங்கம் மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.