உடுமலை: திமுக கூட்டணி கண்டன சார்பில் ஆர்ப்பாட்டம்

1105பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கைவிடக் கோரி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர் மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் இரா. ஜெயராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி