திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தளி பகுதியில் பேரூராட்சித் துணைத் தலைவர் செல்வன் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. குழு ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும் உடுமலை காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.