உடுமலையில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

1371பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் செல்லும் பிரதான பழனி ரோடு வழியாக வாகனங்கள் தாறுமாறாக வருவதால், பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.