உடுமலை: வேளாண்மை துறையினர் வழிகாட்டுதல் வழங்க கோரிக்கை

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி, வட போதனம் பகுதிகளில் விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, வாழையின் நடுவே மொச்சை போன்ற தானியப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் இரட்டை லாபம் ஈட்ட முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர். இதனால், வேளாண்மைத் துறையினர் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்து, அதற்கான வழிமுறைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி