உடுமலை வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

0பார்த்தது
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடுமலை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பதிவு அலுவலர் உடுமலை கோட்டாட்சியர் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, சரிபார்த்து, இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை வருவாய் கோட்டாட்சியர் குமார் ஆய்வு செய்தார். இதில் கௌரி சங்கர் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி