உடுமலை: காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்!

1472பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டு யூ. எஸ் எஸ் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல மாதங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் கிடைக்காததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் உடுமலை தாராபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலமுறை தகவல் தெரிவித்தும் மின் மோட்டார் பராமரிப்பு செய்யாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி