உடுமலை: பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேற்றம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் அம்பிகா ஷா மில் பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தும், பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.