திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லெப்பினேட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான தன்னம்பிக்கை வார விழா நடைபெற்றது. நிறுவனர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பயிற்சி பெற்று வரும் பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான உதவிகள் மற்றும் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட தொழில் முனைவோர் மாவட்ட கருத்தாளர் மணிவாசகம், அறங்காவலர்கள் பிரபாகரன், பாலமுருகன், பயிற்சியாளர்கள் சந்திரன், தனலட்சுமி, பேங்க் முதுநிலை மேலாளர் ராகேஷ், ரிச்சர்டு உட்பட 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.