திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர் கே ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சேன்ஜெரோம், சங்க இலக்கியமான கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு நூலில் உள்ள 99 பூக்களின் பெயர்களை 30 வினாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார். இந்த மாணவருக்கு கலாம் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவனை கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்தி குமார், பள்ளி முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.