திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இன்று ஏராளமானோர் வந்தபோது, சிறுவர் பூங்கா மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே, சிறுவர் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.