உடுமலை: வியாபாரிகள் சங்கம் ஆலோசனை; டிஎஸ்பி பங்கேற்பு

64பார்த்தது
உடுமலை: வியாபாரிகள் சங்கம் ஆலோசனை; டிஎஸ்பி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேரூராட்சி திருப்பூர் சாலையில் உள்ள வியாபாரிகள் சங்க கட்டடத்தில் இன்று வியாபாரிகள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலைப் பேரூராட்சி டிஎஸ்பி நமச்சிவாயம் கலந்து கொண்டு வியாபாரிகளிடம் தேவையான விழிப்புணர்வு குறித்து பேசினார். அனைத்து வியாபாரிகளும் தங்களுடைய வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் முன்புறம் மற்றும் கடைகளின் முன்பு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் உட்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். நிகழ்வில் உடுமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி