உடுமலை: தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்!

921பார்த்தது
உடுமலை: தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் கொண்டு செல்வதைத் தடுப்பது, கைப்பற்றப்படும் பொருட்களை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. காணொளி காட்சி வாயிலாகவும் பயிற்சி வழங்கப்பட்டது. மண்டல அதிகாரிகள், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழுவினர் இதில் பங்கேற்றனர்.