திருப்பூர் உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் மோட்டார் திருடியதாகக் கூறி, இளைஞர்களை மரத்தில் கட்டி ஆடைகளை அவிழ்த்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், அமராவதி காவல்துறையினர் தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.