திருப்பூர் மாவட்டம் உடுமலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு, தொழில் பிரிவு, வல்லுனர்கள் பிரிவு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியினை அகில இந்திய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மோகனப்பிரியா சரவணன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.