திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரசு கலைக்கல்லூரி எதிரில் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில், தற்போது சுற்றுச்சுவரில்லாத காரணத்தால் கால்நடைகள் மேயும் நிலமாக மாறி வருகிறது. எனவே, தற்காலிகமாக கம்பிவேலி அமைப்பதுடன் சுற்றுச்சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.