திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளிரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள சுரங்கப்பாதை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்தப் பாதை வழியாக ஏராளமான பொதுமக்கள் தினமும் சென்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே, சுரங்கப்பாதையை உடனடியாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.