திருப்பூர் உடுமலை அருகே கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை-பொள்ளாச்சி சாலையில் உள்ள முக்கோணம் பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாக விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை சாலைகள் சந்திக்கும் இந்தப் பகுதியில் ரவுண்டானா அமைப்பது அவசியமாகிறது.