திருப்பூர் அமராவதி பிரதான கால்வாய் பராமரிக்க வலியுறுத்தல்

78பார்த்தது
திருப்பூர் அமராவதி பிரதான கால்வாய் பராமரிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் பாசனம் பெற்று வருகின்றன. இதில் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு விரைவில் நீர் திறக்க உள்ள நிலையில், கல்லாபுரம், குமரலிங்கம், காரத்தொழவு, கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது பாசன வாய்க்கால்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் திறப்புக்கு முன் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி