திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய பெரியபட்டி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகில் காலை நேரத்தில் முறைகேடாக மது விற்பனை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் வடக்கு ஒன்றிய
பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுத்து, கடையை மூடச் சொல்லி எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.