திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு யு.எஸ்.எஸ். காலனி, பி.வி. கோவில் வீதி, கொல்லம்பாறை தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று உடுமலை சட்டமன்ற உறுப்பினர் மு. ஜெயக்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உடுமலை திமுக நகர செயலாளர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.