உடுமலை: சாலையில் பெரும் பள்ளம்; வாகன ஓட்டிகள் அச்சம்

1288பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை பழநி ரோட்டில், கூட்டு குடிநீர் திட்ட குழாயில் பல மாதங்களுக்கு முன் ஏற்பட்ட உடைப்பால் நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இது அச்சுறுத்தலாகவும், விபத்து ஏற்படும் அபாயமாகவும் மாறியுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி