உடுமலை திருமூர்த்தி அணையில் 2-ம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு

80பார்த்தது
உடுமலை திருமூர்த்தி அணையில் 2-ம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜன.29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பாசன நிலங்களுக்கு, வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. 

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீர் இழப்பு, மழை இல்லாதது ஆகிய காரணங்களினால், திருமூர்த்தி அணை நீர் மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், கடந்த பிப்.24ல் முதல் சுற்று நிறைவு செய்யப்பட்டது. இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, காண்டூர் கால்வாயில் நீர் எடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பது இழுபறியானது. நீண்ட இழுபறிக்கு பின், இன்று மாலை 6 மணிக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, மூன்றாம் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி