திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு ஜனவரி 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு சுற்று தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், நாளை மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த கொள்ளளவு 60 அடியில் 51.24 அடியாக உள்ளது.