உடுமலை அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்!

1408பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜே.என்.பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில், காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி