உடுமலை அருகே காரை சேதப்படுத்திய காட்டு யானை

1735பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான மறையூர் பகுதியில் சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மூணாறுக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் சொகுசு காரை வழிமறித்து காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த இருவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.